சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளே சொகுசு கார் வாங்க திணறிக் கொண்டிருக்கும்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள துணை நடிகை ஷாலு ஷம்மு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
ஷாலு ஷம்மு 'தசாவதாரம்' படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 2013ம் ஆண்டு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு 'கஞ்சீவரம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்கள், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக ஆடும் படங்களை வெளியிட்டு தனக்கென தனி பாலோயர்களை வைத்திருந்தார். சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தனது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போனை தொலைத்து விட்டு அதை நண்பர்கள் திருடிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். “காரின் மதிப்பு ஒரு கோடி தான் ஆனால் அவர் வாங்கியது பயன்படுத்தப்பட்ட கார். இதை 50 லட்சம் கொடுத்து வாங்கி உள்ளாராம்.
ஷம்மு சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஸ்கின் கேர் தொடர்பான கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.