ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாள நடிகரான பிருத்விராஜ் படப்பிடிப்பின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது ‛விளையாத் புத்தா' என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஜெயன் நம்பியார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மறையூரில் நடந்தது. சண்டைக்காட்சியின் போது அவர் தவறி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் ஆபரேஷன் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது ஒருமாதம் வரை அவர் ஓய்வில் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாம்.
இதனிடையே அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.