'எமர்ஜென்சி' படத்தால் நிதி நெருக்கடி : மும்பை பங்களாவை 32 கோடிக்கு விற்றார் கங்கனா | தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர் | கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை | உதயநிதிக்கு பதில் அளிக்க 'ஏஞ்சல்' பட தயாரிப்பாளருக்கு கோர்ட் உத்தரவு | பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு தாய் பற்றி பேசிய படம் | கல்லுரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை வருமா? | சிறிய விபத்தில் சிக்கி, ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா | வேட்டையன் - 'மனசிலாயோ' பாடல் வெளியானது | 10 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவுகள்… - அதிர்ச்சியடையும் ரசிகர்கள் | 'மெய்யழகன்' குழுவினரின் தமிழ்ப் பற்று |
அனிருத்தின் லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சி தற்போது இந்தியாவின் பல நகரங்களில் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி கொச்சியில் தனது லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை நடத்தினார் அனிருத். இந்த நிகழ்ச்சியில் முதல் பாடலாக அவர் 'தட்டற தட்டற' என்கிற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார். இந்த நிகழ்வில் தன் அருகில் இருந்த இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் உடன் கலந்துகொண்டு பார்வையாளர் பிரிவில் இருந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த பாடலை கேட்டதும் உற்சாக துள்ளலுடன் ஆட ஆரம்பித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
கல்யாணியின் கொண்டாட்டத்திற்கு காரணமும் இருக்கிறது. மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலுக்கு ஹிருதயம் புகழ் இசை அமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். விரைவில் வெளிவர தயாராகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்கி உள்ளார்.
தனது பட பாடலை அனிருத் தனது நிகழ்ச்சியின் முதல் பாடலாக பாடியது தான் கல்யாணி பிரியதர்ஷன் உற்சாக கொண்டாட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.