மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பொருள் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. தெலுங்கில் 'கபாலி' படத்தை வெளியிட்ட கேபி சவுத்ரி என்ற தயாரிப்பாளர் பத்து நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு அவர் போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலுங்கில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் சுரேகா வாணி அவரது மகள் மற்றும் சில நடிகைகள், கேபி சௌத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தெலுங்கில் பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. தமிழில் 'விஸ்வாசம், மெர்சல், ஜில்லா, உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேபி சௌத்ரி சர்ச்சையில் தனது பெயர் சிக்கியிருப்பது குறித்து சுரேகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகளால் எனது தொழில் எனது எதிர்காலம், எனது குடும்பம், எனது குழந்தைகளின் எதிர்காலம், உடல் நலம் அனைத்தும் பாதிக்கப்படும். தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், இந்த சர்ச்சையில் எங்களை இழுக்க வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.