ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை எழுப்பின.
அதேசமயம் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் நடிகர் பிரபாஸுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆதி புருஷ் படம் பார்ப்பதற்காக டோக்கியோவில் இருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சிங்கப்பூருக்கு வந்து ஆதி புருஷ் படத்தை பார்த்துள்ளார்.
அந்த படம் பார்க்கும்போது தன் கையில் இருந்த ஆதி புருஷ் படத்தின் சிறிய போஸ்டர் ஒன்றை காண்பித்தபடி, தான் கற்றுக் கொண்ட தெலுங்கு மொழியிலேயே தான் பிரபாஸின் மிக தீவிரமான ரசிகை என்று பேசி ஆச்சரியப்படவும் வைத்தார் அந்த ரசிகை. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.