லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 |
மலையாள நடிகர்கள் பெரும்பாலும் தமிழில் நடித்து விடுவார்கள். பிரேம் நசீர் காலத்தில் இருந்து பகத் பாசில் வரை அது தொடர்கிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நிகில். இவர் மோகன்லாலின் தங்கை மகன். இவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த புதுமுகம் நேத்ரா ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர், வின்சென்ட் அசோகன், சுப்பு, சங்கீதா, மாறன், சுவாமிநாதன், தனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தொட்டி ஜெயா, சக்கரைகட்டி, என்னமோ நடக்குது உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜூட் ரோமரிக் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் ஜூட் ரோமரிக் கூறியதாவது: மலையாளத்தில் நிகில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். வாழ்கையில் சில நேரங்களில் நடக்கும் விஷயம் நம்மை பயப்படுத்தி தவறான முடிவு எடுக்க தூண்டும். ஆனால் சற்றே சிந்தித்தால், என்ன நடந்தது என்பதற்கும், என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தமே இருக்காது. கதையின் நாயகன் வாழ்வில் நடக்கும் இப்படி ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்த அழகான காதல் கதையாக கூறும் படமாக உருவாகிறது. என்றார்.