சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
தமிழில் 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், ஆயிரம் வாசல் இதயம், கல்லுக்குள் ஈரம், உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018ம் ஆண்டு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 64 வயதாகும் சுதாகர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் “பாரதிராஜாவின் அறிமுகத்தால் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். அதன்பிறகும் ஏராளமான படங்களில் நடித்தேன். பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திரா வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தேன். தமிழகத்தில் எனக்கு இருந்த நிறைய சொத்துகளை விற்று விட்டேன். தற்போது உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன்'' என்றார்.