பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா |

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அவரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் 170வது படத்தை இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் கடைசி படமாக முடிவு செய்துள்ள அவரின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் யஷ் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.