ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆதிபுருஷ் படத்தை விட அதிகமாகவே இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, வில்லனாக நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்குமே தனது சொந்த பணத்தில் இருந்து தலா பத்தாயிரம் ரூபாயை அவர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தியுள்ளார் பிரபாஸ். சலார் படக்குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் பிரபாஸ்.