இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சினிமா நடிகர்களை கண்மூடித்தனமாகத் தொடரும் ரசிகர்கள் நிறைந்த ஊர் இது. சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் அதிகம் இருக்கும். ரஜினிகாந்த் அவரது படங்களில் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதை அடியோடு நிறுத்திவிட்டார். ஆனாலும், விஜய், தனுஷ் போன்ற ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து அவர்களது படங்களில் இப்படியான காட்சிகளை வைத்து வருகின்றனர்.
படங்களில் காட்சிகள் வரும் போது எச்சரிக்கை வாசகங்கள் வந்துவிடும். ஆனால், முதல் பார்வை போஸ்டர், டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கு எந்தவிதமான சென்சாரும் கிடையாது, எச்சரிக்கை வாசகங்களும் கிடையாது. விஜய் தற்போது நடித்து வரும் 'லியோ' படத்தின் முதல் சிங்கள் வெளியீடு பற்றிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில் சிகரெட் பிடிக்கும் விஜய் தான் இடம் பெற்றுள்ளார். தனது ரசிகர்களாக சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என பலர் இருக்கும் நிலையில் விஜய் இப்படியான காட்சிகளில் நடிப்பது சரியல்ல என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ், இப்படியான புகை பிடிக்கும் காட்சிகளுக்கு எதிராகவும், நடிகர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார். 'லியோ' போஸ்டர் குறித்து, “லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
'லியோ' படக்குழு இனி வெளியிடும் போஸ்டர்களிலாவது சமூக அக்கறையை பின்பற்றுமா ?.