ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று பான் இந்தியா படமாக வெளியான படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடியைக் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில், ஹிந்தியில் 30 கோடிக்கு அதிகமாகவும், தெலுங்கில் 50 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்திருக்கலாம் எனச் சொல்கிறார்கள். ஆனால், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து மூன்று கோடியைக் கூட வசூல் கடக்கவில்லை என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.
படத்திற்கு இரு வேறான விமர்சனங்கள் இருந்தாலும் வட இந்தியாவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் அதிகாரிக்க வாய்ப்பிருக்கிறதாம். இருப்பினும் 'ஆர்ஆர்ஆர், பாகுபலி 2 கேஜிஎப் 2, ' படங்களின் முதல் நாள் வசூலை 'ஆதிபுருஷ்' முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.