சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமன்னன்'. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது. உதயநிதி அமைச்சராகிவிட்டதால் இந்தப்படம் தான் அவரின் கடைசி படம் என அவரே கூறி உள்ளார். அதேசமயம் மூன்று ஆண்டுகளுக்கு பின் நடிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இப்படத்தின் ஒவ்வொரு போஸ்டரிலும் உதயநிதிக்கு நிகராக நடிகர் வடிவேலு முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். 'மாமன்னன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலுவும் ஒரு 'மன்னன்' ஆக இருப்பாரோ? என நாம் முன்பே ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். அதை உறுதி செய்வது போன்று படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.
இன்று(ஜூன் 16) படத்தின் டிரைலரை வெளியிட்டனர். 3:05 நிமிடங்கள் ஓடும் இதில் உதயநிதியை விட வடிவேலு தான் பிரதானமாக உள்ளார். டிரைலரின் துவக்கம் முதல் இறுதி வரை வடிவேலு நிறைந்து காணப்படுகிறார். அரசியல்வாதியாக வில்லன் வேடத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார். ஊரில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்னைக்காக உதயநிதி, வடிவேலு இருவரும் முன்னின்று குரல் கொடுப்பதும், அதனால் வரும் பிரச்னைகளை சந்திப்பதும் தான் படத்தின் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. வடிவேலுவும், உதயநிதியும் அப்பா - மகனாக நடித்திருக்கலாம் என தெரிகிறது. மாரி செல்வராஜின் முந்தைய படங்களை போன்று இந்தப்படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த டிரைலரில் ஆச்சர்யப்படுத்தும் விஷயமே வடிவேலு தான். இதுநாள் வரை காமெடியனாக பார்த்து வந்த வடிவேலுவை முதன்முறையாக ஒரு படத்தில் முழுநீள சீரியஸான ரோலில் பார்ப்பது வித்தியாசமாக இருப்பதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இம்மாதம் இறுதியில் படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 29ல் படம் வெளியாகிறது என டிரைலரின் முடிவில் அறிவித்துள்ளனர்.