அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக தயாராகி வரும் தமிழ் படம் 'எல் ஜி எம்'. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று சமீபத்தில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சலானா என்கிற முதல் பாடல் நேற்று மாலை 7.00 மணிக்கு வெளியிட்டனர். ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்துள்ளார். மெலோடி காதல் பாடலாக வெளியாகி உள்ள இதை மதன் கார்கி எழுதி உள்ளார். ஆதித்யா பாடி உள்ளார். பாடல் வெளியான 21 மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.