ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைக் கட்டி திறந்து வருகிறது. அந்த விதத்தில் மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ஆகியோரது பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப் போகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் நரங் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது சென்னையில் எந்த ஒரு நடிகருக்கும் சொந்தமாக தியேட்டர்கள் கிடையாது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள சிவகார்த்திகேயன் முதல் முறையாக தியேட்டர் தொழிலில் இறங்க உள்ளார்.