நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சர்க்கரை நோய் பிரச்னை காரணமாக காமெடி நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் பாவா லட்சுமணன். சரத்குமார் நடித்த மாயி படத்தில் வடிவேலு பொண்ணு பார்க்க போகும் காட்சியில் வா மா மின்னல் என பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து வடிவேலுவின் குழுவில் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக பட வாய்பின்றி, போதிய வருமானமும் இன்றி தவித்து வருகிறார். கூடவே சர்க்கரை நோய் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் தனது கஷ்டத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாவா லட்சுமணன். அங்கு அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
பாவா லட்சுமணன் மட்டுமல்ல இவர் போன்று ஏராளமான துணை நடிகர்கள் தற்போது போதிய பட வாய்ப்பு மட்டும் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு நடிகர்களோ அல்லது சினிமா துறை சார்ந்த சங்கங்களோ உதவ முன் வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.