படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஸ்ரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூரரைப்போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இணைகிறாராம். இவர் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்டுள்ள மாதிரி பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ம் தேதி துவங்கும் என்கிறார்கள்.