திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். இப்படத்தை விபுல் ஷா என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்களை இஸ்லாம் மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாக கதை உருவாக்கப்பட்டதால் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது. சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் தடை விதித்தார்கள். என்றாலும் இது புனையப்பட்ட கதை என்று இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், கருத்து சுதந்திர அடிப்படையில் இந்த படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியது. இப்படம் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்த நிலையில் அடுத்தபடியாக இந்த கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதீப்டோ சென் என்பவர் இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய கதையில் அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார்.