நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, அதன் பிறகு பாடல்களுக்கு நடனமாடி வந்தவர், ஒரு கட்டத்தில் ஹீரோ ஆகிவிட்டார். அதைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வந்தவர், தற்போது மீண்டும் முழு நேர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பிரபுதேவா ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பிரிந்தார்கள். அதன் பிறகு கடந்த 2020ம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த ஹிமோனி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா.
இந்நிலையில் தற்போது பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறாராம். காரணம் ஏற்கனவே பிரபுதேவாவின் தந்தையான நடன மாஸ்டர் சுந்தரத்திற்கு, ராஜூ சுந்தரம், பிரபு தேவா, ராஜேந்திர பிரசாத் என்று மூன்று மகன்கள் மட்டுமே பிறந்த நிலையில், பிரபு தேவாவுக்கும் முதல் மனைவி மூலம் மூன்று மகன்களே பிறந்து இருந்தார்கள். இந்த நிலையில் இப்போது அவருக்கு மகள் பிறந்திருப்பதால் முதன் முதலாக தனது குடும்பத்திற்கு ஒரு பெண் வாரிசு வந்திருப்பதால் பிரபு தேவா பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். இது குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, 50 வயதில் மீண்டும் அப்பாவான பிரபுதேவா விற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.