''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆதி புருஷ்'. இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த வாரம் ஜுன் 16ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் தெலுங்கு வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான தியேட்டர் வெளியீட்டு உரிமை 120 கோடிக்கும், அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை 250 கோடிகளுக்கும் விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற மொழிகளுக்குமான தியேட்டர் உரிமைகளைச் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் அளவிற்கு வியாபாரம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இருப்பினும் பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2, சாஹோ' ஆகிய படங்களின் வியாபார அளவிற்குத்தான் இந்த 'ஆதிபுருஷ்' படத்தின் வியாபாரமும் நடந்துள்ளதாம். 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெறாத காரணத்தால் இந்தப் படத்திற்கான வியாபாரம் உயரவில்லை என்று சொல்கிறார்கள்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றைச் சேர்த்து நடந்துள்ள 120 கோடி வியாபாரத்தை நஷ்டமில்லாமல் மீட்க 200 கோடி வரை வசூலித்தாக வேண்டுமாம். தெலுங்கு ரசிகர்கள் எப்படியும் படத்தை வெற்றி பெறச் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினருக்கு இருக்கிறது.