175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சமீபத்தில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிய படம் "தி கேரளா ஸ்டோரி". அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். கேரளாவில் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. பல மாநிலங்களில் எதிர்ப்பு, சர்ச்சை, தடைகளை கடந்து இந்தப்படம் ரூ.200 கோடி வசூலை சந்தித்தது.
சித்தி இத்னானி அளித்த பேட்டி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இது வழக்கமான கமர்ஷியல் சினிமா இல்லை என்பது புரிந்து இப்படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் என் மனதில் ஏற்பட்டது. இதே உணர்வில் தான் மற்றவர்களும் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களுக்கு சென்றால் இந்த படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்'' என்றார்.