பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை | ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா |
2 நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பா.ஜ., கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 24 பிரபலங்களை சந்தித்து இரவு விருந்து அளித்தார்.
இந்த இரவு விருந்தில் சினிமா துறையை சார்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் ஏஆர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.