நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர் ஜீனத் அமன். 70 வயதை கடந்து விட்ட ஜீனத் அமன் தற்போதும் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். வெப்சீரிலும் நடிக்கிறார். சமூக வலைதளத்தில் பிசியாக இருக்கும் அவர் தனது இளமைகால கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்துடன் “இந்த படம் சம்பந்தபட்ட படத்தின் கதைக்கு தேவையில்லாத ஒன்றுதான். ஆனாலும் இதில் நான் கவர்ச்சியாக, ஆபாசமாக எதையும் பார்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
1971ம் ஆண்டு பிரேம் சோப்ரா நடிப்பில் வெளியான 'ஹல்சுல்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜீனத் அமன். 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 'தம்மர தம்' என்ற பாடலில் ஆடி அந்த காலத்து இந்திய இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'சத்தியம் சிவம் சுந்தரம்' படத்தில் கவர்ச்சியாக நடித்தது அப்போது சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்தார். பாலிவுட் சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு ஹீரோயினுக்காக ஹிட்டான படம் என்றால் அது ஜீனத் அமன் படம்தான்.