சிறுவர்களை மையமாக கொண்ட தமிழ் டார்க் காமெடி தொடர்: 18ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: முதல் பெண் இயக்குனரின் புரட்சிகர படம் | 2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா |
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கஜோல். தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்தார். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது வரை சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூகவலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛என் வாழ்வில் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன் என குறிப்பிட்டு, சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார் கஜோல்.