'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமா தவிர்த்து பல துறைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார் அஜித். புகைப்படம், கார் ரேஸ், பைக் ரேஸ், குட்டி விமானம் தயாரிப்பு என பல துறைகளில் ஆர்வமாக இருக்கிறார். இந்த நிலையில் உலகம் முழுக்க பைக்கில் சுற்றுலா சென்று வரும் அவர், இதுபோன்ற ஆர்வமிக்க இளைஞர்களுக்காக 'ஏகே பைக் ரைட்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். பைக்கிலேயே சுற்றுலா செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் பைக் வழங்கி, வழிகாட்டும்.
இந்த நிறுவனத்திற்காக அஜித் முதல்கட்டமாக 8 பைக்குகளை ஆர்டர் செய்துள்ளார் என்றும், ஒவ்வொரு பைக்கும் சுமார் 1 கோடி விலையை கொண்டதாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக பைக் ரேஸ்களை நடத்தும் 'பைக் ரேஸ் கிளப்' ஒன்றும் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம் அஜித்.