நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

நடிகர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார். தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அவரும் கடந்த சில வருடங்களாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் டி3 படத்தின் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு நிற்க அதற்கு தக என்று தலைப்பு வைத்துள்ளனர். கிரைம் கலந்த த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.