சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | ஆஸ்கர் விருது : டாப் 15ல் நுழைந்த ‛ஹோம்பவுண்ட்' | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? |

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த், சம்யுக்தா விவகாரத்தில் முதல் ஆளாக விஷ்ணுகாந்துக்கு சப்போர்ட் செய்து பதிவிட்டார் நடிகை ரிஹானா. முன்னதாக அர்னவ் விவகாரத்தில் அர்னவ் செய்த தவறுகளை அம்பலபடுத்திய ரிஹானா, விஷ்ணுகாந்துக்கு குட் பாய் சர்டிபிகேட் கொடுத்ததால் விஷ்ணுகாந்த் பக்கம் ஆதரவு பெருகிறது. இந்நிலையில், ரிஹானா குறித்து ரசிகர் ஒருவர் சம்யுக்தாவிடம் கமெண்டில் கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள சம்யுக்தா, 'ரிஹானா விஷ்ணுகாந்த் கூட வாழ்ந்த மாதிரி சப்போர்ட் பண்றாங்க. என்ன பத்தி பேசுறாங்களே அவங்க பாஸ்ட்ட தோண்ட ஆரம்பிச்சா சிரிப்பா சிரிச்சிடும். ரிஹானா என் பிரச்னையில மட்டுமல்ல யார் பிரச்னைனாலும் முதல் ஆளா பேட்டி கொடுத்துடுவாங்க. ஏன்னா, அந்த டாப்பிக்கோட சேர்ந்து அவங்களும் பிரபலமாகி விடலாம்ல்ல! அதுக்குதான் இப்படி எல்லாம் விளம்பரம் செய்றாங்க. சரி இப்படியாச்சும் பொழச்சுட்டு போகட்டும்' என நக்கலாக பதில் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்யுக்தா ஆதரவாளர்கள் ரிஹானாவை கிண்டலடிக்க துவங்கியுள்ளனர்.