நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மறுபக்கம் தனது அரசியல் பயணத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகளையும் செய்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாவட்டம் வாரியாக அவரது மக்கள் இயக்கத்தினரை மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். அடுத்தப்படியாக வறுமை ஒழிப்பு தினத்தில் மாவட்டம் தோறும் மதியம் ஒருவேளை உணவு வழங்கினார்.
இப்போது மாணவர்களை சந்திக்க உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக விஜய் சார்பில் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு....
‛‛சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று நடந்து முடிந்த 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்'' என்று அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.