தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் ஜுன் 16ம் தேதி வெளிவர உள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. விழாவில் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைப் அலிகான் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் ஓம் ராவத், பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
பிரபாஸ் பேச ஆரம்பித்த பின் ரசிகர்கள் அவரிடம் திருமணம் பற்றி கூச்சல் எழுப்பி கேள்வி கேட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே 'இங்கு திருப்பதியில்தான் எனது திருமணம் நடக்கும்,” என பதிலளித்தார். 'பாகுபலி' படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. அது அவர் 'ஆதிபுருஷ்' படத்தில் நடிக்கும் வரையிலும் அவ்வப்போது வந்து போனது.
'ஆதிபுருஷ்' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கிரித்தி சனோன், பிரபாஸ் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்தது. 43 வயதான பிரபாஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். நேற்றைய அறிவிப்பின் மூலம் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மணப்பெண் நடிகையா என்பதன் சஸ்பென்ஸ்தான் நீடிக்கிறது.




