லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கோல்கட்டாவில் இருந்து கடந்த வாரம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 275க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றார்கள். ஆனபோதிலும் அங்கு பிரதமர் வர இருந்ததால் விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட முடியாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவருக்கு எதிராக ஒரு விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில், 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார்' என டுவிட்டரில் பதிவிட்டுளளார்.