நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! |

மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ரெஜினா. சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நீபா ஆதிதன், ரிது மந்த்ரா, தீனா, விவேக் பிரசன்னா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரில் அதிரடியான ஆக்சன் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதோடு இதன் பின்னணியில் ஒரு கதையும் சொல்லப்பட்டு வருகிறது. அதில், 'ஒரு சிங்கம் அந்த காட்டில் இருக்கும் அனைத்து உணவு பொருட்களையும் கொண்டு சென்று தனது குகைக்குள் வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக காட்டில் இருக்கிற மற்ற விலங்குகளுக்கு சாப்பிட எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றன. அதையடுத்து மற்ற விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிங்கத்தின் குகைக்கு தீ வைத்து விடுகின்றன. எப்பேர்ப்பட்ட சிங்கமாக இருந்தாலும் குகைக்கு தீ வைத்து விட்டால் வெளியில் வந்து தானே ஆக வேண்டும்' என்று அந்த கதை சென்று கொண்டிருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இந்த ரெஜினா படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.




