'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டில்லியை சேர்ந்த திவ்யன்ஷா கவுசிக் 'மஜ்லி' தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'தி வொய்ப்' என்ற இந்தி படத்தில் நடித்தவர் தொடர்ந்து தெலுங்கில் 'ராமராவ் ஆன் டூட்டி' படத்தில் நடித்தார். பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழில் தயாரான 'மைக்கேல்' படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததால் அவரது கேரியரில் தேக்கம் ஏற்பட்டது.
தற்போது அவர் ஏற்கெனவே நடித்து முடித்த 'டக்கர்' படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதில் அவர் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கி உள்ளார். பணத்தை தேடி ஓடும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனும், பணமே வேண்டாம் என்று கருதும் ஒரு கோடீஸ்வர பெண்ணும் ஒரு கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதாக சொல்லப்படும் ரோட் மூவி இது. மைக்கேல் படத்தின் தோல்வியால் சோர்ந்திருக்கும் திவ்யன்ஷா கவுசிக் டக்கராக வருவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.