புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அஜித்தின் மைத்துனரான இவர் ‛காதல் வைரஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். ஹீரோவாக போராடி வரும் இவர், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்கு பின் ஓரளவுக்கு பேசப்படும் நடிகராகி உள்ளார். அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அதை மறுக்கவில்லை.
இதுபற்றி யாஷிகாவின் அம்மாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛நானும் தினமும் இதுபோன்ற செய்திகளை சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் பார்த்து வருகிறேன். ரிச்சர்ட், யாஷிகா இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்களை இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். அதை வைத்து ஏதேதோ எழுதுகின்றனர். ஆனால் எதுவும் உண்மை இல்லை. அந்தபடம் குறித்து தகவல்கள் வெளிவரும் போது தான் எல்லோரும் நம்புவீர்கள்'' என்கிறார்.