பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம், 'ஜவான்'. நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று இந்த படம் வெளியாகிறது.
சமீபத்தில் பிரியாமணி அளித்த பேட்டி ஒன்றில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்; “இதற்கு முன் அவர் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா என்ற யோசனையில் இருந்தேன். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் என்னைப் பார்த்ததும் வழக்கம்போல கட்டியணைத்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தினமும் பல பிரபலங்களை ரசிகர்களை சந்திக்கும் அவர் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய என்னை ஞாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று இவ்வாறு கூறினார்.