'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1930ல் பிறந்த அவர் தனது 25வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மறைந்த சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில், ‛‛சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சுலோச்சனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.