சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அவருடன் நடிப்பதற்காக அந்த நாட்டு நடிகர், நடிகைகளும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடன இயக்குனர் பரா கான், ஷாருக்கானை வைத்து இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்கிற படத்தில் ஷாருக்கானின் தந்தையாக நடித்தவர் பாகிஸ்தான் நடிகர் ஜாவேத் ஷேக்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சம்பளம் பேசப்பட்டபோது தனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ஜாவேத் ஷேக், ‛‛தான் அப்படி கூறினாலும் அவர்களாகவே ஒரு தொகையை எனது சம்பளமாக நிர்ணயித்து, அதில் எனக்கு முதல் கட்டமாக ஒரு காசோலை கொடுத்தார்கள். அந்தத்தொகையைப் பார்த்தே நான் பிரமித்துப் போனேன்” என்று கூறியுள்ளார்.