எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
காமெடி நடிகர் சதீஷ் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் கடந்த வருடத்தில் அவர் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த நாய் சேகர் படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்து. தொடர்ந்து தற்போது வித்தைக்காரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் வெங்கி இயக்கி வருகிறார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வெங்கட் பரத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று(ஜூன் 5) இந்த படத்தின் டப்பிங் பணிகளை பூஜையுடன் சதீஷ் துவங்கி உள்ளார்.