கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படம் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 19ம் தேதிதான் வெளியாக உள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதற்குப் பின்னணியில் இருப்பது விஜய்யா, அல்லது படத்தின் தயாரிப்பாளரா என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத அளவிற்கு ஒரு பெரும் வியாபாரம் அப்படத்திற்கு நடந்துள்ளதாக பரப்பி வருகிறார்கள். இதுவரையில் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்திற்கான கேரள வினியோக உரிமையும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு உரிமைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக வெளியீட்டு உரிமை அல்லது ஏரியா வாரியாக விற்கப்படும் உரிமை ஆகியவைதான் முக்கியமானவை. இவற்றை அதிக விலைக்கு விற்கவே மற்ற உரிமைகளைப் பற்றிய தகவல்களைப் பரப்புகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே, விஜய் அவருடைய அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவலைப் பரப்பினார்கள். இப்போது 'லியோ' உரிமை பற்றிய தகவல் பரப்பப்டுகிறது. இந்த வருடத்தின் அதிக வியாபாரமாக 'லியோ' படம்தான் இருக்கும். அதற்குப் பிறகே ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம் இருக்கும் என ரஜினி ரசிகர்களையும் வம்புக்கிழுக்கிறது அந்த 'லியோ' குரூப்.