''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போதும் பிஸியான நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி. அப்போது முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர் பேசும்போது, தான் அப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் இருப்பது தெரிய வந்ததாகவும் உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சிரஞ்சீவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது போலவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போலவும் வெளியாக துவங்கின. சிரஞ்சீவியின் கவனத்திற்கு இது வந்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாகத்தான், அப்படி ஒரு மருத்துவ பரிசோதனையை நான் செய்து கொண்டபோது முன்கூட்டியே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை கண்டறிய முடிந்தது என்றும் கொஞ்சம் நாட்கள் தாமதம் ஆகியிருந்தால் அது புற்றுநோயாக மாறி இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் என்பதையும் உணர்த்தும் விதமாகத்தான் நான் பேசினேன். ஆனால் நானே புற்றுநோயால் பாதிக்கப்பட்டது போன்று செய்திகள் தவறாக வெளியாகி வருகின்றன. தயவுசெய்து இப்படி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிரஞ்சீவி.