மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த 2001ம் ஆண்டில் மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கதாநாயகியாக நடித்தார். ஆனால், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு கடந்த 10 ஆண்டுகளாக விலகி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விமானம், டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியதாவது: "நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமானம் படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போனதால் இந்த படத்தில் நடித்தேன். நான் எப்போதும் படத்தின் கதை, அதில் எனக்கு உள்ள கதாபாத்திரம் ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும் தான் மனதில் வைத்து தேர்வு செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.