'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், தமன்னா, இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஹைதராபாத், கடலூர், ஜெய்சால்மர், மங்களூர், சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பை கடந்த மாதத் துவக்கத்தில் வெளியிட்டார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு 2021 தீபாவளிக்கு வெளிவந்த 'அண்ணாத்த' படம் தோல்வியடைந்தது. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'ஜெயிலர்' வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.