ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த மாதம் படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் இன்று(ஜூன் 1) மாலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி, மிஷ்கின், எஸ்ஜே சூர்யா, வெற்றிமாறன், பிரதீப் ரங்கநாதன், போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வடிவேலு : உங்கள் வீட்டுப் பிள்ளையான நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் எல்லோர் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும். உதயநிதி நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏ ஆர் ரகஹ்மான் இசையில் பாடி இருக்கிறேன், நான் பாடவில்லை அவர்தான் என்னை பாட வைத்துள்ளார். நான் எங்கும் செல்லவில்லை எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் செல்போனில் வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் மறைந்த என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம் இது, படம் நிச்சயம் வெற்றி பெறும். தேவர் மகன் படத்துக்கு பிறகு எனக்கு மிகப்பெரிய படமாக, குணச்சித்திர வேடம் நிறைந்த கதையாக அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம், அரசியல் படம், புதுமையான படம். உதயநிதிக்கு இது கடைசி படம் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார், இனி அரசியலில் ஹீரோவாக போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.