பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் உதயநிதி பேசியதாவது : முதன்முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் நடித்துள்ளேன். மாரி செல்வராஜ் படத்தில் என்ன இருக்குமோ, என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்த படத்திலும் உள்ளது. வடிவேலு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதான் எனது கடைசி படமாக இருக்கும். கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் பொறுப்பு வந்துவிட்டது. நிறைய பணிகள் இருப்பதாலும், நாளுக்கு நாள் பொறுப்பு கூடியதாலும் இனி நடிப்பது சரியாக இருக்காது என முடிவு பண்ணினேன். பல பணி சுமைகளுக்கு இடையே தான் இந்த படத்தின் டப்பிங் மற்றும் இசை வெளியீட்டுக்கு நேரம் ஒதுக்கினேன்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படங்கள் கிடையாது, அதற்குப் பின்பு எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை நடித்தால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் இருக்கும் என அவரிடமே வாக்குறுதி கொடுத்துள்ளேன். இது என் கடைசி படம், நல்ல படமாக அமைந்தது திருப்தி என்றார்.