கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ் சினிமாவின் சாதனையாளர் என்று மற்ற திரையுலகக் கலைஞர்களாலும் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். அவர் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'சலார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவருக்கு அதற்காக கதாநாயகனாக நடிக்க வாங்கும் சம்பளத்தை வழங்கத் தயாராக உள்ளார்கள் என்றும் செய்தியைப் பரப்பி வருகிறார்கள். ஒரு நடிகர் என்ன சம்பளம் வாங்குகிறார் என்று அவருக்கும் அவருக்கு அந்த சம்பளத்தைக் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மட்டுமே தெரியும். இல்லையென்றால் அவர்களின் ஆடிட்டர்களுக்குத் தெரியும்.
அதிக சம்பளத்திற்காக வில்லனாகவும் நடிக்க கமல்ஹாசன் சம்மதிக்க மாட்டார் என அவரது தீவிர ரசிகர்கள் நம்புகிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் மூலம் அதிக வசூல் சாதனையைப் பெற்று அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள், பிரம்மாண்டப் படங்கள் என தனது திட்டமிடலை வைத்திருக்கும் கமல்ஹாசன் தனது இமேஜை மாற்றி வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை என்பதுதான் அவர்களது ரசிகர்களின் கருத்து.
கமல்ஹாசன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் சில ரஜினி ரசிகர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். அதிக சம்பளம் கொடுத்தால் ரஜினிகாந்தும் வில்லனாக நடிப்பாரா என்றும் அவர்கள் எதிர் கேள்வி கேட்கிறார்கள்.