''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ஆர்ஆர்ஆர். மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் அமைந்ததுடன் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதையும் வென்றது. இந்த நிலையில் நடிகர் ராம்சரனை வைத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவரது முதல் ஹிந்தி படமான ஜஞ்சீர் என்கிற படத்தை இயக்கிய அபூர்வ லகியா என்கிற இயக்குனர் ராம்சரண் பற்றியும் ஆர்ஆர்ஆர் படத்தில் பணியாற்ற தன்னை அழைத்தது குறித்தும் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ராம்சரண் பற்றி கூறும்போது, “ஜஞ்சீர் படம் ஆரம்பித்ததில் இருந்தே நானும் ராம்சரணும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட அவர் என்னுடன் தொடர்ந்து நல்ல நட்பில் இருந்தார். ஐதராபாத் செல்லும்போது தவறாமல் அவரது வீட்டிற்கு சென்று வருவேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் நான் போன் செய்தால் அவர் எடுக்கவே மாட்டார். சரியான நேரத்தில் அவரிடம் இருந்து பதிலும் வராது.
அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது உக்ரைனில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராம்சரண், உங்களுக்கு ஏதாவது பெரிய வேலை இருக்கிறதா.. ஏனென்றால் இங்கே இரண்டு மூன்று ஆக்சன் காட்சிகளை படமாக்குவதற்கு இரண்டாவது யூனிட் இயக்குனராக பணிபுரிய வேண்டும். உங்களால் முடியுமா ? செய்து தருவீர்களா ? என்று கேட்டார்.
நான் சம்மதம் தெரிவித்து விரைவில் அதுகுறித்து உங்களிடம் தொடர்பு கொள்கிறேன் என்று கூறினேன். அதன் பிறகு மீண்டும் என்னை அழைத்த அவர் உங்களால் உடனே முடியுமா என்று கேட்டார். அப்போது எனக்கு சில வேலைகள் இருந்தன. அதனால் அந்த சமயத்தில் ராம்சரணின் கோரிக்கையை ஏற்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.