சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு |
பஷில் ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மின்னல் முரளி'.
மின்னல் தாக்கியதால் கிடைத்த சக்தியை வைத்து படத்தின் நாயகனும், வில்லனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் போலவே மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் 'வீரன்' படத்தின் கதை என்று மட்டும் படக்குழுவினர் இதுவரை தெரிவித்து வந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா, வினய், ஆதிரா ராஜ் மற்றும் பலர் நடிப்பில், எஆர்கே சரவண் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் வெளிவர உள்ள படம்தான் 'வீரன்'.
'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்காகத்தான் 'வீரன்' படத்தை எடுத்துள்ளார்கள் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தது. அதற்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் உடன் ஆதி, எஆர்கே சரவண் ஆகியோர் வீடியோ காலில் பேசுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் வீரன் பட டிரைலர் பார்த்தேன். மின்னல் முரளி போன்று இருப்பதாக கலாய்த்த பஷில் பின்னர் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் 'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்கா 'வீரன்' என்பதற்கான விடையும் தெரிந்துவிட்டது.