'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகர், எம்.பி.யான சத்ருக்கன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது மும்பையில் புதிய பிளாட் ஒன்றிற்குக் குடியேறி உள்ளார். கடற்கரையைப் பார்த்தபடி இருக்கும் அந்த பிளாட்டிலிருந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
“வயதாவது… கடினமானது.. செடிகள், பானைகள், விளக்குகள், மெத்தைகள், தட்டுகள், குஷன்கள், நாற்காலிகள், மேசைகள், முட்கரண்டிகள், கரண்டிகள், சின்க், தொட்டி… ஆஆஆஆ… தலை சுழல்கிறது,” என தனது வீடு மாற்றம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள பல பாலிவுட் பிரபலங்கள் கடற்கரை அருகாமையில் உள்ள வீடுகளில், பிளாட்களில் வசிப்பதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். பல கோடி ரூபாய் கொடுத்து பிளாட் வாங்கும் நிலைதான் மும்பையில் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே தனி பங்களாவில் வசித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லிங்கா' படத்தில் அவரது ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அதற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. தற்போது சில ஹிந்திப் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.