'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன். இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், " நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்.
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர். அதில் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக கூட நடிப்பேன். அதேபோல் அதிரடியாக சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்."
இவ்வாறு தெரிவித்துள்ளார்.