கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீடு நாளை(ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றதால் சினிமாவில் நடிப்பதை உதயநிதி நிறுத்திவிட்டார். அவர் நடிக்கும் கடைசிப் படம் இது என சொல்லப்படுகிறது. எனவேதான், இசை வெளியீட்டை பிரம்மாண்ட விழாவாக நாளை நடத்த உள்ளார்களாம்.
இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு பேச்சு கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித் துறை சோதனை, அமலாக்கத் துறை சோதனை ஆகியவற்றால் சூழலில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, தகவல் பரவியபடி நாளை ரஜினி, கமல் கலந்து கொண்டு சிறப்பிப்பார்களா என்பது சந்தேகம் என்றும் சொல்கிறார்கள்.
உதயநிதியுடனும், திமுகவுடனும் இணக்கமாக இருக்கும் கமல்ஹாசன் வேண்டுமானால் கலந்து கொள்ளலாம், ரஜினிகாந்த் தவிர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.