கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
அஜித்தின் 62வது படம் பற்றி எந்த நேரத்தில் முதன் முதலில் அறிவித்தார்களோ தெரியவில்லை. அப்போது முதல் இப்போது வரையிலும் ஏதோ ஒரு தடங்கலை சந்தித்துக் கொண்டே வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அஜித் நடித்த 'துணிவு' படம் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த பின் அஜித்தின் 62வது படம் பற்றிய அப்டேட் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்ற தகவல் மட்டும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன்பின் அந்த தகவல் உண்மையென நிரூபிக்கும் வகையில் சில தினங்களில் தன்னுடைய சமூக வலைத்தள புரொபைல்களில் 'அஜித் 62 இயக்குனர்' என்பதை நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாகவும், படத்திற்கு 'விடாமுயற்சி' என தலைப்பு வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்த மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியானது. படத்திற்காக செட் அமைக்கும் வேலைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
இப்போது படத்தைப் பற்றிய புது தகவல் ஒன்று கசிந்துள்ளது. அண்மையில் 'விடாமுயற்சி' படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்சில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. அதனால், படத் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றலாமா என்ற யோசனையில் அஜித் இருக்கிறாராம். 'விஸ்வாசம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திடம் படத்தை அப்படியே மாற்றிவிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல். அது முடிந்த பின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
அப்படி எதுவும் மாற்றம் வருமா, 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரிய வரும்.