சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

ருத்ரன், பொன்னியின் செல்வன்-2, கஸ்டடி போன்ற படங்களுக்கு பிறகு தற்போது கிரிமினல், ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சரத்குமார். அதோடு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் சரத்குமார்.
அவர் பேசுகையில், தற்போது எனக்கு 69 வயது ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். என்றாலும் எப்போதுமே நான் என்னை 25 வயது இளைஞன் போலவே கருதிக் கொள்கிறேன். என்னால் 150 வயது வரை உயிருடன் வாழ முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்து இருக்கிறேன். ஆனால் அந்த வித்தையை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்னை தமிழக மக்கள் முதல்வர் ஆக்கினால் அனைவருக்கும் நான் சொல்லுவேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
மேலும், இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் சிறந்த கல்வி கற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அறிவாற்றல் படைத்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனபோதிலும் மது காரணமாக மக்களிடம் ஒருவித தடுமாற்றம் உள்ளது. அதனால் மதுவை ஒழிப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதை ஒழிப்பதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் உறுதியுடன் இறங்கி போராட வேண்டும் என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.